விவசாயிகளுக்கு உதவிய பிரசன்னா சினேகா தம்பதி!

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து கொண்டிருக்கிறது. அதனால் பல விவசாயிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள மீதமுள்ள விவசாயிகள் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன் வைத்து போரடிக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த அவல நிலையில் சினிமாவின் மூலம் இணைந்த பிரசன்னா, சினேகா தம்பதியினர் 15 தமிழக  விவசாயிகளுக்கு தங்களால் முடிந்த நிதி உதவி அளித்துள்ளனர்.

இது பற்றி செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, நாம் இன்று வீட்டில் நிம்மதியாக உக்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க காரணமானவர்கள் விவசாயிகள். அவர்களின் நிலை இவ்வளவு மோசமாக இருப்பதை பார்த்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அதனால் தான் எங்களால் முடிந்த இந்த உதவிகளை செய்கிறோம். மேலும் இது விளம்பர நோக்கில் செய்யப்பட்ட செயல் அல்ல. இதனைப் பார்த்து மற்றவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை விவசாயிகளுக்கு செய்வார்கள். அதற்காகத்தான் பத்திரிக்கைகளை அழைத்திருக்கிறோம் எனவும் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*