”இந்து மதத்தின் அச்சுறுத்தல் ஆர்.எஸ்.எஸ்”:முன்னாள் பாஜக ஊழியர்!

பாஜக அரசாங்கத்தின் தன்னார்வலராக பணியாற்றி வந்தவர் சாதவி கோஷ்லா. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பாஜக-வை விட்டு விலகினார். பாஜக சார்பாக போராட்டங்களிலும் பிரச்சாரங்களிலும் கலந்து கொண்ட சாதவி அந்த கட்சியை விட்டு விலகியது கோள்விக்குள்ளானது. இதுகுறித்து அவர் கேரவன் (caravan) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விலகியதற்கான காரணத்தை கூறியிருந்தார். அதில், “நான் ஒரு சமூக ஆர்வலர். பஞ்சாபில் தவறாக போதை பொருள் பயன்படுத்துவது பற்றி பிரமருக்கு ட்விட் செய்தேன். இந்த பிரச்சனை பற்றி ஒரு ஆவணப்படத்தையும் ( ‘Fading Glory’ என்ற பெயரில் 2016ஆம் ஆண்டு வெளியானது) எடுத்திருக்கிறேன். இந்த பிரச்சனையில் பிரதமர் அமைதி காத்தது எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதான் பாஜக-வை விட்டு விலக முக்கியமான காரணம் என்று தெரிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு திரைப்பட தணிக்கை குழு பெரிதும் பிரச்சனை செய்த ‘உட்டா பஞ்சாப்’ (Udta punjab) திடைப்படம், பஞ்சாபில் நிலவும் போதை பழக்க பிரச்சனை பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.

பாஜக-வை விட்டு விலகி இரண்டு ஆண்டுகளான நிலையில், பாஜக ஆதரவு அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பற்றி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சாதவி கோஷ்லா. அதில் அவர், “மூளைச்சலவை செய்யப்பட்ட இந்துக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், இந்து மதத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது இஸ்லாமியர்களோ கிறித்தவர்களோ கிடையாது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தீவிரவாத செயலே அதற்கு காரணம்” என்று பதிவு செய்திருக்கிறார்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*