’ஜெ’ பாணியில் திமுகவுக்கு பதில் சொன்ன ஜெயக்குமார்!

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அதிமுக, அமைச்சர்களும் சரி எம்.எல்.ஏக்களும் சரி காலில் விழுவதைத் தவிற வேறு எதுவும் செய்ய முடியாது. ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அமைச்சர்கள் ஓரளவு ஊடகங்களில் முகம் காட்டினாலும், பெரும்பலான அமைச்சர்களுக்கு பேச்சுத் திறமையோ, எதிர்க்கட்சியினருக்கு பதில் சொல்லும் அரசியல் அறிவும் உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள்.

பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி அணியினர் இணைவதற்கு முன்பு  “விட்டால் ட்ரம்பின் வெற்றிக்கும் நானே காரணம் என்று பன்னீர் செல்வம் சொன்னாலும் சொல்வார்” என்றார் நிதியமைச்சர் ஜெயக்குமார். அதன் பின்னர்தான் மொத்த மீடியாக்களும் ஜெயக்குமாரை திரும்பிப் பார்த்தனர்.

அதிர்ந்து பேசாதவர் ஒரளவு கட்சியினரிடமும், அரசு அதிகாரிகளிடமும் நல்ல பெயர் எடுத்த ஜெயக்குமாரின் இந்த அதிரடியை பன்னீர் தரப்பும் எதிர்பார்க்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பிறகு அவரது ஆஸ்தான ஆலோசகர் ஆகியிருக்கிறார் ஜெயக்குமார்.

ஜெயலலிதா இருந்த போது அவர் திமுகவுக்கு பதில் சொல்கிற பாணியே வேறு. ஆனால் அதிமுக அமைச்சரவையில் இருக்கும் ஜெயக்குமார் அதே பாணியில் திமுகவுக்கு பதில் சொன்னது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்திருக்கிறது.

காரணம். அவரும் ஊடக வெளிச்சத்திற்குள் வருகிறார். அவருக்குள் ஏதோ ஒன்று ஒழிந்திருக்கிறது.  நிதியமைச்சர் ஆகி  சில மாதங்கள் கூட ஆகாத நிலையில்  நிதியமைச்சர் பொருப்பை பன்னீருக்கு தாரை வார்க்கும் சூழல் வந்து விடுமோ என்பதால் தனக்கும் அரசியல் செய்யத் தெரியும் என்பதை அதிமுகவினருக்கு உணர்த்தியிருக்கிறார் ஜெயக்குமார்.

சேத்துப்பட்டு ஏரியில் 6 கோடி ரூபாயில் பூங்கா அமைக்கும் பணி நடைபெறுகிறது. அப்பணிகளை ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சர் ஜெயக்குமார் நேற்று சேத்துப்பட்டு பூங்காவுக்கு வருகை தந்தார். ஆய்வை முடித்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வார இறுதி நாட்களில் சேத்துப்பட்டு ஏரிக்கு 2000 மக்கள் வருகின்றனர். நீர்வாழ் உயிரின காட்சியகத்தில் வண்ண மீன்கள் வளர்க்கப்படும். சேத்துப்பட்டு ஏரி படகுகள் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் துறையினை மேம்படுத்த முக்கியத்துவம் தரப்படும் என்றார்.

அவரிடம் இன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், இரு அணிகளின் இணைப்பு குறித்து  பன்னீர் செல்வம் அணி எப்போது வேண்டுமானாலும் பேச்சுவார்த்தைக்கு வரலாம். எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. பேச்சுவார்த்தைக்கு பன்னீர் அணியினரை அழைத்துள்ளோம். அவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நாளை(இன்று) வந்தால் பேச்சுவார்த்தை நடக்கும். ஆட்சி தொடரவே அனைவரும் விரும்புகிறோம்,. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். திமுக கட்சி 6 மாதம் இல்லை 60 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரமுடியாது. கட்சி நலன் கருதி நிதியமைச்சர் பதவியை  பன்னீருக்கு விட்டுக்கொடுக்க தயார். அவர்கள் பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைகளை முன்வைக்கலாம். பேச்சுவார்த்தை குறித்து ஊடகங்களிடம் பன்னீர் அணியினர் பேச வேண்டாம், டிடிவி தினகரனை ஒதுக்கிய முடிவில் யாருடைய நிர்பந்தமும் இல்லை. தினகரன் விவாகரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஒருமனதுடன் முடிவு செய்தோம். என்று கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*