நாளை முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

விவசாயிகள் பிரச்சனையை முன் வைத்து முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் அறிவித்திருக்கும் நிலையில், நாளை முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்  கோரியும் பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசிடம் பல முறை மனுக் கொடுத்தும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.  இந்நிலையில் நாளை அறிவித்துள்ள இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. 64 துறைகளைச் சார்ந்த நான்கு லட்சம் அரசு  ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.  நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசு ஊழியர்களி காலவரையற்ற வேலை நிறுத்தம் தமிழகத்தை முடக்கும் எனத் தெரிகிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*