விவசாயிகள் போராட்டம் ஒத்தி வைப்பிற்கான காரணங்கள்!

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராடி வந்த விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கின்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டம் உருவாக்கிய நெருக்கடிகள் அதிகம். எந்த வடிவத்திலும் இப்போராட்டம் மற்ற இந்திய விவசாயிகளும் இணைந்த டெல்லி போராட்டமாக மாறி விடக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சம்பிரதாயமாக இப்போராட்டத்தை ஆதரித்தார்களேயின்றி இப்போராட்டத்தை பரவலாக்க  எந்த ஒரு முயற்சிகளும் எடுக்கவில்லை.

இந்நிலையில்  மத்திய அரசு பல வழிகளில் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பல வழிகளில் முயன்றது. திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், நேற்று டெல்லி செல்வதற்கு முன்பே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் போராட்டத்தை முடித்து வைத்து விட்டுதான் நீங்கள் தமிழகம் செல்ல வேண்டும் என்று டெல்லி பாஜகவினர் கொடுத்த அழுத்தத்தால் தம்பிதுரை அதை முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பே நேரில் வந்து தம்பிதுரையும், எடப்பாடி பழனிசாமியும் போராட்டத்தை முடித்து வைப்பதாக அறிவித்தார்கள்.

இது அய்யாக்கணணுவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. “மோடி உத்திரவாதம் தர வேண்டும்” என்றார். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் மே 25-ம் தேதி வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறார் அய்யாக்கண்ணு.

ஒத்திவைப்பு காரணம்: –

1.*தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி* அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று *பிரதமர் மோடி* அவர்களிடம் வலியுறுத்தி கூறி, தமிழக விவசாயிகளுக்கு கோரிக்கையை செய்து தருவதாக கூறியது.

  1. *தமிழக திமுக கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்* அவர்கள் நம் மரண போராட்ட விவசாயிகளுக்காக அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, வரும் 25ம் தேதி தமிழகம் தழுவிய *கடை அடைப்பு* மற்றும் அனைத்து தமிழக அமைப்புகளும் இணைந்து நடத்தும் ஒருநாள் போராட்டம்..
  2. *பாஜகவின் தமிழக மத்திய மந்திரி பொன்.இராதாகிருஷ்ணன்* அவர்களின் ஆலோசனைக்கு இணங்க – 15நாட்களுக்குள் செய்து தருவதாக கூறியது என்ற கோரிக்கைகளை முன் வைத்து தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது விவசாயிகள் போராட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*