சச்சினுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு?

‘Sachin: A Billion Dreams’ படத்தின் Hind Mere Jind எனும் முதல்பாடல் நேற்று சச்சினின் 44வது பிறந்தநாளன்று வெளியிடப்பட்டுள்ளது.
சச்சின் இந்தியாவின் கிரிக்கெட் அணியில் இணைந்து தனது 16வது வயதில் நாட்டுக்காக விளையாடாத் தொடங்கி தனது 40வது வயதில் கிரிக்கெட்டிலிருந்து முற்றிலுமாக ஓய்வுபெற்றார். அவர் விளையாடிய 24 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட் அனைத்திலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். சச்சினைப் பற்றிய ஒரு பாடமே மேல்நிலைப் பள்ளியின் ஆங்கிலப் பாடத்தில் வைக்கப்பட்டிருந்தது.  
 
இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.  நேற்று  சச்சின் பிறந்தநாளை முன்னிட்டு  இப்படத்தின் பாடல் யூட்யூபில் வெளியாகி 9 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது.
 
இப்படத்திற்கு இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான்  அவர்கள் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் சச்சினின் சொந்த தயாரிப்பில் உருவாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*