திமுக பந்த்: கடையை திறந்து கல்லாக்கட்டிய திமுக பெரியசாமி!

திமுக அறிவித்த முழு அடைப்பு போராட்டம் தமிழக அளவில் பெரும் வெற்றி பெற்ற நிலையில் திமுக பிரமுகரான திமுக பெரியசாமி தன் மகள் பெயரில் உள்ள கீதா இன்டர் நேஷனல் ஹோட்டலை மூடாமல் திறந்து வைத்து வியாபாரம் செய்தார். இது தூத்துக்குடி திமுகவினரிடையே சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
பெரியசாமி தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருக்கிறார். கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்த பெரியசாமி கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்ததோடு. செல்வத்தோடும், செல்வாக்கோடும் தூத்துக்குடியில் வலம் வருகிறார். இவரது மகள் பெ. கீதா ஜீவன் இப்போது தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ -வாக இருக்கிறார்.
பெரியசாமி எமரால்ட் ரெஸ்ட், கீதா இன்டர் நேஷனல் என்ற உணவு விடுதியையும் ஹோட்டலையும் தன் மகள் பெயரில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் திமுகவும் ஏனைய கட்சிகளும் இன்று விவசாயிகளுக்காக கடை அடைப்பு அறிவித்த நிலையில் திமுகவினர் ஒவ்வொரு கடை கடையாக சென்று இன்று கடைகளை மூட வேண்டும் என்று துண்டு நோட்டீஸ் கொடுத்து வேண்டு கோள் விடுத்தனர்.


இன்று காலை சில சிறு வணிகர்கள் திறந்து வைத்திருந்த கடைகளையும் திமுகவினர் மிரட்டி அடைக்க வைத்தனர். ஆனால் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும். தற்போது எம்.எல்.ஏ வாக இருக்கும் மகள் கீதா ஜீவனின் தந்தையுமான பெரியசாமியே திமுக தலைமையின் முடிவுக்கு எதிராக கடையை திறந்து வைத்து வியாபாரம் பார்த்திருப்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*