12 ஆயிரம் பசுக்களுக்கு ஆதார் அட்டை!

இந்தியாவில்  13 மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது.  பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு எனும்  பெயரில் பல திட்டங்களை அமல் படுத்தி வரும் நிலையில், இப்போது பசுக்களை பாதுக்காக்க அவைகளுக்கு ஆதார் எண் வழங்கத் துவக்கியுள்ளது.பசுக்கள் சட்ட விரோதமாக கடத்தைத் தவிர்க்க  இந்த  ஆதார் எண் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக 12 ஆயிரம் பசுக்களுக்கு வழக்கப்பட்டு உள்ளது என ஜார்க்கண்ட் மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு அளித்த விளக்கத்தில், பசுக்களின் வயது, உயரம், நிறம், கொம்புகளின் வகை, வால் நீளம் ஆகியவற்றை பதிவு செய்து அவற்றுக்குச் சிறப்பு எண் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
இதனை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். இந்த நடவடிக்கை மூலம் பசுக்கள் கடத்தலைத் தடுக்க முடியும் என தெரிவித்து இருந்தது. கடத்தப்பட்டதாக கருதப்படும் பசுக்களை எளிதான முறையில் கண்டுபிடிக்க அனைவரும் தகவல் தெரிவிக்கும் வகையில் 24 மணிநேரமும் செல்படும் வகையில் இலவச உதவி எண்களும் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிப்பதற்கு முன்னதாகவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்திய அரசாங்கத்தின் ஒரு பிரிவான ஜார்க்கண்ட் மாநில கால்நடை மற்றும் பஃப்போலோ மேம்பாட்டு நிறுவனம் (JSIACB) ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசுக்களுக்கு ஆதார் அடையாள அட்டை போன்று பசுக்களுக்கு சிறப்பு எண் வழக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ராஞ்சி, ஹசாரிபாக், தான்பாத், போகாரொ, ஜாம்செட்பூர், தியோகார்க், கிரிதிக் மற்றும் லோகார்தாகா ஆகிய மாவட்டங்களில் திட்டமானது முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கால்நடை உற்பத்தி மற்றும் பாதுகாப்பு தகவல் நெட்வோர்க் (ஐஎன்ஏபிஎச்) என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழே ஜார்க்கண்ட் மாநிலத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு உள்ளது. ஐஎன்ஏபிஎச் திட்டத்தின் ஜார்க்கண்ட மாநில தலைவர் கேகே திவாரி பேசுகையில், “விரைவில் கால்நடைகள் தொடர்பான தகவல்கள் விரைவில் சர்வரில் பதிவுசெய்யப்படும்,” என குறிப்பிட்டு உள்ளார்.
12 இலக்க சிறப்பு எண்ணானது மாடுகளின் காது பகுதியில் இணைக்கப்படுகிறது. மாடுகளின் வயது, இனம், இறுப்பிடம், நிறம், கொம்பின் வகை, வாலின் கலர், சிறப்பு அங்க அடையாளம் மற்றும் பிற தகவல்கள் அதனுடன் இணைக்கப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 42 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன, அவற்றில் 70 சதவிதம் பசுக்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 24 மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை முன்னெடுக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது, ஒரு வருடத்திற்கு 18 லட்சம் மாடுகளுக்கு சிறப்பு அடையாள எண்ணை வழங்க கேட்டு உள்ளது என திவாரி கூறிஉள்ளார். பசுவதையை தடுக்க சிறப்பு அடையாள எண் உதவிசெய்யும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பசுவதை தடை சட்டம் அமலில் உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*