எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவசரக் கூட்டம்!

தினகரன் கைதாகி உள்ள நிலையில் , இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்கான கூடுதல் ஆவணங்களை நேற்று தேர்தல் கமிஷனிடம் சமர்பித்து விட்டது.  ஆனால் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஆவணங்களை சமர்ப்பித்தலில் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர்.

இதுவரை தினகரன் இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் பணிகளை செய்து வந்த நிலையில் இப்போது அவர் டெல்லி விசாரணையில் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் ஆவணங்களில் கையொப்பம் பெறுவது  ஆவணங்களை சமர்ப்பிப்பதில் குழப்பம் காணப்படுகிறது.

தவிறவும் பேச்சுவார்த்தை என்று சொல்லி கொண்டிருந்த பன்னீர் அணி திடீரென ஆவணங்களை சமர்பித்து விட்ட நிலையில் அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று  சென்னையில் ஆலோசனையில் ஈடுபடுகிறார் எடப்பாடி பழனிசாமி.

மாவட்டச் செயாலாளர்கள், அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தம்பிதுரையும் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க கையெழுத்து வாங்குவது. இரு அணிகளும் இணைவது தொடர்பாக விவாதிக்க இருக்கிறார்கள்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*