நள்ளிரவு கைது: வலியச் சென்று சிக்கிய தினகரன்!

தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில்  டி.டி.வி. தினகரன் டெல்லியில்  நேற்று கைது செய்யப்பட்டார்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கட்சியை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி விட்டு சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றார் சசிகலா. கட்சியை ஒருங்கிணைக்கும் பணியை தினகரனிடம் வழங்கி விட்டுச் செல்ல அவரோ சொதப்பி எடுத்ததில் செம கடுப்பில் இருக்கிறார் சசிகலா.
சசிகலாவுக்குப் பிறகு தினகரனுக்கு ஸ்கெட்ச் போட்டவர்கள் புரோக்கர் சுகேஷை ரெடி செய்து அதிமுக வழக்கறிஞர்கள் மூலம் தினகரனுடன் பேச வைக்க சுகேஷின் வரலாறு தெரியாத தினகரனும் அவருடன் பேசியதாகத் தெரிகிறது.
இதற்கு முன்னர் ஒரு முறை சுகேஷ் கருணாநிதியின் பேரன் என்று யாரோ கொடுத்த கூலிக்காக நாடகமாடி சிக்கியவர்தான். அவர் தான் இந்த தினகரன் ஆபரேஷனை வெற்றிகரமாக முடிப்பார் என்று அவரை தெரிவு செய்திருக்கிறார்கள்.

தனது சித்தி சசிகலாவுக்கும் தனக்கும் அதிமுக தலைமைக்கும் நெருக்கடி இருக்கிறது என்பதைக் கூட அறியாமல் அனைவரையுமே ஜஸ்ட் லைக் தட் டீல் பண்ணியது போல டெல்லி நபரையும் டீல் பண்ணியிருக்கிறார். தேர்தல் கமிஷனில் சின்னம் பெற புரோக்கர் சிஸ்டம் கிடையாது என்பது கூட தெரியாத தினகரன் புரோக்கரிடம் பணம் கொடுத்து சின்னத்தைப் பெற்று விடலாம் என்று நம்பியிருக்கிறார். அதனால்தான் தேர்தல் கமிஷன் கூடுதல் ஆவணங்களை சமர்பிக்கக் கோர கால அவகாசம் கோரினார். இந்த கால அவசாகத்திற்கு இடையில் கமிஷன் கொடுத்து இரட்டை இலைச் சின்னத்தை பெற்று விடலாம் என்று அதிமுகவில் உள்ள அதிமேதாவிகள் சிலரே தினகரனிடம் சொல்ல அவரும் அதை நம்பியிருக்கிறார்.
சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கும் நிலையில் தினகரனை டெல்லி திஹார் சிறையில் தள்ளினார் அதிமுகவை கையாள்வது எளிது என்ற நோக்கில் உருவான ஸ்கெட்ச்தான் சுகேஷ் ஆபரேஷன்.
சுகேஷ் தன்னை புரோக்கர் என்று சொல்லாமல் டெல்லி நீதிபதி என்று சொல்லியிருக்கிறார். அதாவது நீதிபதிக்கே கமிஷன் கொடுப்பதாக நினைத்துக் கொண்டுதான் இதைச் செய்து சிக்கலில் மாட்டி இப்போது நள்ளிரவில் கைதாகி சிறைக்குச் சென்றிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*