பன்னீர் அணிக்கு இரட்டைஇலை!

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவைச் சரிக்கட்ட இரு அணிகளும் பேச்சுவார்த்தைக்கான குழுக்களை அமைத்த போதிலும் பேச்சுவார்த்தை துவங்க வில்லை. பன்னீர்செல்வம் அணியினர் சசிகலாவை நீக்க வேண்டும் அவரது உறவினர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை அடுக்கிய நிலையில் பேச்சுவார்த்தை முறிந்து போனது. இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றும் நோக்கில்  பன்னீர் செல்வம் அணியினர் கூடுதல் பிரமாண பத்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் சின்னத்தையும் கட்சியையும் முடக்கிய நிலையில் 6 ஆயிரம் அதிமுக  தொண்டர்களின் கையெழுத்தோடு அதிமுக எங்களிடமே உள்ளது என்று ஆவணத்தை  தயாரித்துக் கொடுத்துள்ளனர். 87 தொகுதிகளில் உள்ள தங்கள் அணி உறுப்பினர்களின் கையெழுத்தைப் பெற்று தேர்தல் ஆணையத்திடம் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.

ஆனால், அதிமுகவில் உள்ள 90%  பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் கையெழுத்தோடு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு மனுக்கொடுத்தும் தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணம் கேட்டது. இப்போது டெல்லி போலீசாரின் விசாரணையில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்க பணம் கொடுத்ததாக கூறப்படும்  வழக்கொன்றில் தினகரன் விசாரிக்கப்படும் நிலையில் அவர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தினகரனும் டெல்லியில் முடங்கியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் கமிஷன் கேட்ட ஆவணங்களை   தயாரிக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் அதே நேரம் பன்னீர் அணி ஒப்ப்படைத்துள்ள ஆவணங்கள்  முன்னர் சசிகலா அணி  ஒப்படைத்த ஆவணங்களை விட பலவீனமானது. அதனால் தினகரன் தரப்பை பலவீனமடைய வைத்து பன்னீர் அணிக்கு இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.  தினகரன்  கைது என்பது நேற்று மதியமே உறுதியாகி விட்ட நிலையில் பன்னீர் அணியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த கைதை மனதில் வைத்துதான் “பேச்சுவார்த்தைக்கான சுமூக சூழல் ஏற்படும்” என்று பன்னீர் சொன்னார்,

பன்னீர் செல்வம் அணியை பலமாக்கும் முயற்சியின் இறுதி வடிவம்  இது!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*