கட்டணக்கொள்ளை;-பாகுபலி 2?

இன்றைய சூழலில் குடும்பத்தோடு திரைப்படத்துக்கு போக ஒரு கனிசமான தொகை தேவைப்படுகிறது. வண்டி நிறுத்தும் இடம் முதல் உள்ளே உள்ள சிற்றுண்டி விடுதி வரை அனைத்திலும் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்களின் கொள்ளை ஒருபுறமிருக்க, முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக இருக்கிறது. இதுபற்றிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை முறையாக செயல்படுத்தப்படவில்லை. திருட்டி விசிடியை ஒழிக்க ஓயாமல் குரல் கொடுக்கும் திரைத்துறையினர் இந்த பிரச்சனையை கண்டுகொள்வதில்லை. அவர்களது லாபத்தை பாதிக்கும் விசயங்களுக்கு மட்டும் குரல் கொடுத்துவிட்டு சினிமா ரசிகனை பாதிக்கும் விசயங்களுக்கு மௌனம் சாதிப்பதால் சினிமா என்ற கலை சார்ந்த பொழுதுபோக்கு காணாமல் போகும் நிலையில் உள்ளது. ஒரு திரைப்படம் ஒரு வருட காலம் மக்களுக்காக திரையிடப்பட்டது போய், வார இறுதி நாட்களை கடந்து வசூலை எடுப்பதற்காக மட்டும் திரையிடப்படுகிறது. இதனால் சினிமா என்ற கலைப்படைப்பின் ஆயுள் காலம் குறைந்திருக்கிறது.

‘பாகுபலி 2’  திரைப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியாவில் 6500, வெளிநாட்டில் 2000 என மொத்தமாக 8500 திரையரங்குகளில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட நாள் எதிர்பார்ப்பு என்பதால் டிக்கெட்டுகளுக்கு பலத்த டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. முக்கியமான நகரங்களில் உள்ள பெறும்பாலான திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்று வருகிறது. சமூகவலைத்தளங்கள் வழியாக ’பாகுபலி 2’ படத்தின் நிலவரம் குறித்து தகவல்கள் வேகமாகப் பறிமாறப்படுவதால் எங்கெல்லாம் டிக்கெட்டுகள் கிடைக்கின்றனவோ உடனே அந்த டிக்கெட்டுகளை வாங்கப் பலரும் முயற்சி செய்கிறார்கள். இதனால் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் நிச்சயம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாலை 4 மணி காட்சிக்கு 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை சில இடங்களில் டிக்கெட் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி நற்றமிழன் பழனிசாமி தன் முகநூலில் எழுதியிருக்கும் பதிவு!

பாகுபலி 2 படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 125 ரூபாய் (2 டிக்கெட்) வரை சலுகை தருகின்றது . இதன் மூலம் நிறைய பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றார்கள். இதனால் செயற்கையாக அந்த படத்தை பார்ப்பதற்கு நிறைய பேர் அலை மோதுவதாக ஒரு நிகழ்வு உருவாக்கப்படுகின்றது, இதனை வைத்து இந்த படத்தை அப்புறம் பார்த்து கொள்ளலாம் என இருப்பவர்களும் பார்க்க தூண்டப்படுகின்றார்கள். இன்னும் சில நாள் இந்த படம் தான் அதிகமா வசூலாச்சுன்னு இவங்களே பீலா உடுவாங்கய‌

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*