தாயும் இல்லை தந்தையில்லை அழுது அரற்றிய செல்லூர் ராஜூ

ஜெயலலிதா மறைவுக்கு அடுத்து அதிமுக தாய் தந்தையை இழந்து நிற்கிறது என்று உருகினார் அமைச்சர் செல்லூர் ராஜு.

அதிமுக கட்சியின் இரு அணிகளும் இணையும் சூழல் தற்போது உருவாகியிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைச்சர்கள் இரட்டை இலை சின்னத்தை இனி ஒன்றிணைந்தால்தான் பெறமுடியுமென்பதாலும் மேலும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டுமென்பதாலும் இரு அணியினரும் ஒற்றுமையாக இருப்பது போல் பேசுகிறார்கள். நாங்கள் அண்ணன் தம்பிகள் எங்களுக்குள் சிறிய கருத்து வேறுபாடுதான் இருக்கிறது  பிளவெல்லாம் எதுவும் இல்லை என்றெல்லாம் கூறி வருகிறார்கள். ஆனால் இதே அமைச்சர்கள் சிறிது மாதங்களுக்கு முன் எப்படி பேசி வந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜீ சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் 7,000 கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது அதிமுக அணிகளின் இணைப்பு குறித்து பேசுகையில், இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் சுமூகமாக இருக்கிறது. விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இன்னும் 4 ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி நடைபெறும். வரும் தேர்தலிலும் அதிமுக கட்சியே வெல்லும். மாற்று கட்சிகளுக்கு வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக ஜெயலலிதாவின் வழிகாட்டுதலால் சிறப்பாக செயல்பட்டது. தற்போது தாயும் தந்தையும் இழந்தவர்கள்போல் தனித்துவிடப்பட்டுள்ளோம் என்று பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*