நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சு: பன்னீர் அணி மிரட்டல்

நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சசிகலா, தினகரனை விலக்கி வைக்க வேண்டும் என்று பன்னீர் அணி  நிபந்தனை  விதித்து வந்த நிலையில், அவர்களை கட்சியை விட்டு விலக்கி வைத்த பின்னர். அவர்கள் குடும்பத்தினர் மொத்தத்தையும் விலக்கி வைக்க வேண்டும் என்ற புது நிபந்தனை விதித்தது பன்னீர் அணி. ஆனால் உண்மையில் முதல்வர் பதவியும், முக்கிய அமைச்சுகளும், பொதுச் செயலாளர் பதவியும் வேண்டும் என பன்னீர் அணி  விதித்த நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்கு பதில் விமர்சனமும் வைத்தனர்.  பன்னீர் அணியோ அந்த அப்படி விமர்சனம் வைத்தவர்களையே காரணமாகச் சொல்லி பேச்சுவார்த்தைக்கு வர மறுத்தது.

பின்னர் அமைச்சர் வைத்திலிங்கம்  தொலைபேசியிலும் நேரிலும் சென்று பேச்சுவார்த்தைக்கு  அழைத்த நிலையில் நேற்று பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றும் பேச்சு வார்த்தை நடைபெறவில்லை.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழனிசாமி தரப்பினரிடம் சில நிபந்தனைகளை வைத்துள்ளோம். நாங்கள் அவர்களிடம் வைத்திருக்கும் நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடங்கப்படுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பன்னீர் அணியின் இந்த முடிவால் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.

தினகரனை சென்னைக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தும் டெல்லி  காவல்துறையின் அறிவுரைப்படி மேலும் சில அமைச்சர்கள் மீது  வழக்குகளைப் போட்டு எடப்பாடி பழனிசாமி அணியை பலவீனமாக்கி பன்னீர் அணி கேட்கும் பதவிகளை விட்டுக் கொடுப்பதற்கான உகந்த சூழலை உருவாக்குவதுதான் திட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*