பழம்பெரும் ஹிந்தி நடிகர் வினோத் கண்ணா மரணம்

பழம்பெரும் ஹிந்தி நடிகர் வினோத் கண்ணா மும்பையில் மரணம் அடைந்துள்ளார். சமீபகாலமாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 70 ஆகும். இவர் 1968 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வந்தவர். இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான ‘தில்வாலே’ படத்தில் ஷாருகான் உடன் இணைந்து நடித்தார். இவர் நடித்த ‘குர்பானி’, ’தயவான்’, ‘மேரே அப்னே’ போன்ற படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்றது. மேலும் இவர் பாஜக சார்பாக 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற நாடளுமன்றத் தேர்தலில் குர்தாஸ்புர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியவர். வினோத் கண்ணாவின் மறைவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*