மா.செ-க்களை வறுத்தெடுக்கப் போகும் ஸ்டாலின்!

கருணாநிதி உடல் நலம் குன்றி இருக்கும் நிலையில் இன்று ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. திமுக தமிழகத்தில் எதிர்க்கட்சி ஆனால் ஆளும் கட்சி போன்ற தோற்றம் அதற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களைப் போலவே தொகுதிக்குள் வலம் வருகிறார்கள். அரசியலுக்கு வந்து கட்சியை வைத்து தொழில் அதிபர்களாக உயர்ந்தவர்கள் இப்போது தொழிலதிபர் தோரணையில் கட்சி வேலையை பார்ட் டைம் பிஸ்நஸ் போல செய்து  வருகிறார்கள் என்பது பல மாவட்ட செயலாளர்கள் மீது குற்றச்சாட்டு.

அது போல மீண்டும் மீண்டும்  கருணாநிதி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களின் வாரிசுகளே இன்னும் கட்சிக்குள் செல்வாக்குச் செலுத்துகிறார்கள். நம்பிக்கை தரும் பல இளையவர்கள் மக்கள் பிரச்சனைகளுக்காக முன்னால் வந்து போராட துணிந்த போதும் அவர்களை குறு நில மன்னர்களின் வாரிசுகள் தடுத்து  விடுகிறார்கள். அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து கொண்டு தங்கள் தொழில் சுதந்திரமாக இடைஞ்சல் இன்றி  நடக்க கட்சியினரை மட்டம் தட்டுகிறார்கள்.

மிக முக்கியமாக பந்த் அறிவிக்கப்பட்ட நேற்று முன் தினம் கட்சியினர் ஏதோ  பந்திக்கு வருவது  போல வந்து சென்றதும். திமுக போராட்டம் அறிவித்த அன்று  தொழிலை கவனிக்கச் சென்றவர்கள் மீதும் புகார் வந்திருக்கிறது.

ஆர்.கே. நகர்   தொகுதியில் தொப்பிக்கு துணை போனவர்கள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்து இத்தனை குழப்பங்களுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்திருக்கிறது ஆனால், ஒவ்வொரு அதிமுக எம்.எல்.ஏ, கட்சியினரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. குழம்பிய குட்டையில் அவர்கள் மீன் பிடிக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அடுத்த தேர்தலில் நாம் தான் வரப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை ஒரு எம்,.எல்.ஏ வோ, மாவட்டச் செயலாளரோ நம் கட்சியை தேடி வரவில்லை. அதற்கு காரணம் மாவட்டச்  செயலாளர்கள். மற்ற கட்சியினரை ஈர்க்கும் வகையில் நடந்து கொள்வதில்லை மாவட்டச் செயலாளர்கள். என்கிற கோபத்தில் இருக்கிறார் ஸ்டாலின்.

இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பைல் போட்டு காய்க்கப் போகிறார் செயல் தலைவர்!

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*