சக்கரவர்த்தி திருமகனின் இறுதி பயணம்

1945 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் வினு சக்கரவர்த்தி. ‘குரு சிஷ்யன்’, ‘அண்ணாமலை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். 2007ல் வெளிவந்த முனி அவரின் படமாகும். காமெடி, வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரம் என அவர் நடிக்காத கதாபாத்திரம் இல்லை என கூறலாம். ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘பாண்டவர் பூமி’போன்ற படங்கள் அவரது சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்த சில படங்களாகும். நடிகர் மற்றும் இயக்குநராகவும் திகழ்ந்தவர் வினு சக்கரவர்த்தி. சில்க் ஸ்மிதா என்ற மறக்க முடியாத நடிகையை தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும்.இறுதியாக 2014ல் வெளிவந்த வாயை மூடி பேசவும் படத்தில் நடித்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72 ஆகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*