அதிமுக அணிகளை சார்ந்து பாஜக இல்லை : நிர்மலா சீதாராமன்

அதிமுகவின் இரு அணிகளை சார்ந்து தமிழகத்தில் வளரும் நிலை பாஜகவுக்கு இல்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அதிமுக கட்சி இரண்டு அணிகளாக பிரிந்திருக்கிறது. இரண்டு அணிகளுக்குமான சுமூக பேச்சுவார்த்தை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு அணியினரும் முரண்பட்ட கருத்துகளை கூறி வருகின்றனர். மேலும் பன்னீர் செல்வம் அணியை மறைமுகமாக பாஜக கட்சிதான் இயக்கி வருகிறதென்றும், பன்னீரை கையில் வைத்து கொண்டு தமிழகத்தில் செல்வாக்கு பெற பாஜக கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர். விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து, டிடிவி தினகரன் கைது போன்ற விவகாரங்களுக்கு பின்னாலும் பாஜகதான் செயல்பட்டு வருகிறதென்றும் கூறப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் நேற்று இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிமுக கட்சியின் இரு அணிகளை சார்ந்து வளரும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் அதிமுகவின் இரு அணிகளைச் சார்ந்து வளரும் நிலையில் பாஜக இல்லை”  “காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது இந்தி பற்றி ஸ்டாலின் ஏன் கேட்கவில்லை. தமிழகத்தில் இந்தி மொழியை மத்திய அரசு திணிக்கவில்லை கொடநாடு கொலை வழக்கு போன்ற விவகராங்களில் தமிழக அரசு சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் டிடிவி தினகரன் கைதுசெய்யப்பட்டதற்கும் பாஜகவுக்கும் எந்தத் சம்பந்தமும் கிடையாது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*