முரண்பாடு தீர்ந்தால்தான் பேச்சுவார்த்தை : ஜெயக்குமார்

இரு அணிகள் இணைவது தொடர்பான பிரச்சனையில் பன்னீர் செல்வம் அணியினர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள் எனவும், முரண்பாடு தீர்ந்தால்தான் பேச்சுவார்த்தை எனவும் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினகரனை கைது செய்த பிறகு அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவது குறித்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான சூழல் உருவானது. ஆனால் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்கினால் இரு அணிகளும் இணைய வாய்ப்பு இருப்பதாக பன்னீர் செல்வம் அணியினர் தெரிவித்தனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் ஒன்றுகூடி சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு ஒதுக்கிவைப்பதாக தெரிவித்தனர். இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தும் வகையில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை  குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் இரு தரப்பினருமே எதிரெதிர் கருத்துக்களை  பேசி வருவதால் இரு அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு அணியினருக்கும் பதவி பிரச்னையா? இல்லை நிபந்தனைகள் பிரச்னையா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே வருகிறது. சேலத்தில் பேசிய பன்னீர் ஆதரவாளர் செம்மலை பன்னீர் செல்வம் விரைவில் முதல்வராவார் என்றார். இதற்கு பன்னீர் செல்வம் அணி விளக்கமளிக்கும்படி கேட்டு கொண்டார். அதற்கு பொன்னையன் அது சேலம் மாவட்டத்தினரின் கருத்து என்றார். இவ்வாறாக அதிமுகவின் இரு அணியினரும் கருத்து மோதல் மற்றும் முரண்பட்டே பேசி கொண்டிருக்கிறார்கள். இதனால் இரு அணிகளும் இணைவது காலதாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  ஜெயக்குமார், பன்னீர் செல்வம் அணியினர் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். நிபந்தனைகள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என பன்னீர் செல்வம் தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பன்னீர் செல்வம் அணியின் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஒரு கருத்தை சொல்கிறார், பொன்னையன் ஒரு கருத்தை கூறுகிறார்…செம்மலை ஒரு கருத்தை கூறுகிறார்.. ஒவ்வொருவரும் முரண்பட்ட கருத்தை பேசி வருகிறார்கள்.  முரண்பாடுகள் தீர்ந்தால்தான் பேச்சவார்த்தை நடைபெறும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*