முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்து இருக்கும் நிலையில், ஆட்சி செயல்படும் விதம் குறித்து பல்வேறு விமர்சனங்களும், குழப்பமான கருத்துகளும் நிலவி வருகின்றன. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் முழுமையடையவில்லை. எனவே அதனை நடத்துவது தொடர்பான விவாதங்கள் இந்த கூட்டத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீட் தேர்வு தொடர்பான சட்ட மசோதாக்கள், அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள், மணல் குவாரி பிரச்னைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*