மோடியின் வாய் பேச்சினால் பயனில்லை : கி.வீரமணி

ராமானுஜரைப் புகழ்ந்து தள்ளும் மோடி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டு வருவாரா என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று முன்தினம் கணித மேதை ராமானுஜரின் 1000-மாவது பிறந்த தினமாகும். அதனை முன்னிட்டு அவரின் தபால் தலை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி தபால் தலையை வெளியிட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, ராமானுஜர் குறித்து மோடி பேசுகையில்,’ 1000 ஆண்டுகளுக்கு முன்பே முற்போக்குச் சிந்தனையாளராக விளங்கியவர், மக்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர் ராமானுஜர்’ எனப் புகழ்ந்து பேசினார்.

இந்நிலையில் மோடி பேசியது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசுகையில்,’ ராமானுஜரைப் புகழ்ந்து தள்ளும் மோடி, அவரது கொள்கைக்கு ஏற்ப அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வருவாரா?அனைத்து தரப்பினரும் ஆலயத்துக்கு வரலாம் எனக் கூறி தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்தவர் ராமானுஜர். அவருடைய கனவுகளை நிறைவேற்றாமல் வெறும் வாய்ப்பேச்சினால் எந்தப் பயனும் இல்லை’ என அவர் மோடியை விமர்சித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*