தொலைக்காட்சி நடிகை ரேகா சிந்து மரணத்தில் சந்தேகம்?

கன்னட தொலைக்காட்சி நடிகை ரேகா சிந்துவின் கார் வேலூர் மாவட்டம் சுண்ணாம்புகுட்டை பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுபாட்டை இழந்து விபத்துகுள்ளானது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த டிவி துணை நடிகை ரேகா சிந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது உடல் திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காரில் அவருடன் வந்த அபிஷேக்குமரன்(22), செங்கல்பட்டை சேர்ந்த ஜெயன்கந்ரன்(23), சென்னையை சேர்ந்த ரஷன்(20) ஆகிய மூன்று பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது, அதிகாலையில் சாலையின் தடுப்பு சுவரின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரேகா சிந்துவின் சகோதரர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : ரேகா சிந்து கார் விபத்தில் இறந்துவிட்டார் என்று எங்களுக்கு தகவல் வந்தது. உடனே நாங்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு அவரது உடலை பார்த்தபோது அது விபத்தில் இறந்தது போலவே இல்லை. மேலும், காரில் ரேகா சிந்துவுடன் வந்த அவரது மூன்று நண்பர்களும் தப்பி ஓடி உள்ளனர். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அனைவரும் சீட்பெல்ட் அணிந்திருந்த போது ரேகா மட்டும் எப்படி காரில் இருந்து வெளியே வீசப்பட்டார் எனவும், விபத்து என்றால் உடன் வந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடியது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்றார். இது பற்றி போலீஸ் உரிய விசாரணை நடத்தி எங்கள் சகோதரியிம் சாவில் உள்ள மர்மத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், பிரதீப்குமார் என்ற சின்னத்திரை நடிகர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ரேகாவும் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகி இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*