பதஞ்சலி தயாரிப்புகளில் கோமியம் கலப்பதில்லை: பாபா ராம்தேவ்.

Indian yoga guru Baba Ramdev stretches during an anti-corruption protest in New Delhi, India, Tuesday, Aug. 14, 2012. Ramdev sipped a glass of fruit juice offered by supporters ending his hunger strike Tuesday but said his battle against endemic corruption in India will continue. (AP Photo/Rajesh Kumar Singh)
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அன்னா அசாரே ஊழலுக்கு  எதிராக போராடிய போது அந்த போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர் யோகா குரு பாபா ராம் தேவ். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பாப ராம்தேவுக்கு செல்வாக்குக் கூடியது பல்லாயிரம் கோடி முதலீட்டில் பதஞ்சலி நிறுவனத்தையும்  துவங்கி பல்லாயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளார். இந்து மதம், ஆன்மீகம் என்பதை அரசியல், ஆட்சிக்கும் மட்டுமல்ல பொருட்களின் விற்பனைக்கும் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் பாபா ராம்தேவ்.
கடந்த வருடத்தில் பதஞ்சலி நிறுவனம் 10,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவித்திருக்கிறார் பாபா ராம்தேவ்.
ஹரித்துவாரில் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அவர் பதஞ்சலி நிறுவனத்தின் திட்டங்கள் குறித்தும், வருவாய் குறித்தும் அறிவிப்புகள் செய்தார். பதஞ்சலி நிறுவனத்தின் லாப எண்ணிக்கை பன்னாட்டு நிறுவனங்களை எல்லாம் ‘கபல்பதி’ ( மூச்சு பயிற்சி) செய்ய வைக்கும் எனவும் கூறினார்.
பதஞ்சலி நிறுவனத்தின் பிரதிநிதியாக எப்போதுமே ஒரு வணிகர் வர வாய்ப்பே இல்லை, ஒரு சன்னியாசி தான் பதஞ்சலி நிறுவனத்தின் பிரதிநிதியாக எப்போதும் இருப்பார் எனக் கூறிய பாபா ராம்தேவ், ஜம்மு காஷ்மீரில் புதிய கிளை ஒன்றை துவக்க திட்டமிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், பதஞ்சலி தயாரிப்புகளில் கோமியம் கலக்கப்படுகிறதா எனும் கேள்விக்கு, மக்கள் தவறான தகவல்களை பரப்புவதாக பதிலளித்தார். இறுதியாக, பதஞ்சலி நிறுவனம் கோடிக்கணக்கான இந்தியர்களின் நிறுவனம் என்றும் அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*