பொது இடத்தை ஆக்கிரமிக்கிறதா நடிகர் சங்கம்?

நடிகர் சங்கத்திற்காக கட்டப்படும் புதிய கட்டிடம் பொது இடத்தை ஆக்ரமித்து கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக கடந்த மாதம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நடிகர் ரஜினி மற்றும் கமல் விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். திரையுலகை சார்ந்தவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். கட்டடம் கட்ட பலர் நிதியுதவியும் செய்து வருகின்றனர்.

இதற்கு முன்பாகவே நாசர் மற்றும் ஜே.கே.ரித்திஷ் பிறந்த நாளையொட்டி ஒருமுறை அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்டு விட்டது. தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடக்கவிருந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் அடிக்கல் நாட்டு விழாவை நடத்துகிறார்கள் என தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் தாணு தெரிவித்தார். அதனை ஜே.கே.ரித்திஷும் ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலையார் ஆகியோரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகர் சங்க புதிய கட்டிடமானது 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதனால் நடிகர் சங்க கட்டடம் கட்ட தடை விதிக்க வேண்டும் எனவும் நாளைக்குள் நடிகர் சங்கத்திடமிருந்து இதற்கான பதில் கிடைக்க வேண்டுமெனவும் சென்னை மாநகராட்சிக்கும் நடிகர் சங்கத்திற்கும் இவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*