எனக்கு திருமணம்,பாஸ் பண்ணி விடுங்கள்: விடைத்தாளில் கோரிக்கை வைத்த மாணவி!

மாணவர்கள் எழுதும் தேர்வுத் தாள்களில் மோசடிகளும், காமெடியகளும் நிறைந்த தேர்வாக அமைவது பீஹார், உத்திரபிரதேச மாநிலங்களில் நடக்கும் தேர்வுகளில்தான்.
கடந்த பல ஆண்டுகளாக, உத்திரபிரதேச தேர்வில் மாணவர்கள் பதில்கள் எழுதுவதை நிறுத்தி விட்டு. தேர்வுத் தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு கோரிக்கைகளை எழுதி மதிப்பெண்கள் தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்கள். அப்படி ஒரு மாணவி வைத்த கோரிக்கை விசித்திரமானது.
”தனக்கு ஜூன் மாதம் 28ஆம் தியதி திருமணம் நடக்கவுள்ளது, என்னை எப்படியாவது பாஸ் பண்ணி விடுங்கள், இல்லையெனில் என் குடும்பம் கவலை அடைந்து விடும்’’ என எழுதியுள்ளார். இதே போன்று “மாணவர்கள், 100 அல்லது 50 ரூபாயை விடைத்தாள்களில் இணைத்து தன்னை பாஸ் செய்யுங்கள்’’ என்றும் எழுதியுள்ளனர் என விடைத்தாள் திருத்துகிறவர்கள் தெரிவிக்கின்றனர்.
“ இப்படிப்பட்ட வேலைகளை தாங்கள் ஒருபொழுதும் ஊக்கப்படுத்துவது இல்லை எனவும், ஆசிரியர்களை இந்த வஞ்சனைகளால் வெல்ல முடியாது’’ எனக் மாவட்ட கல்வி ஆணையர் முகேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், ‘’இதனை இப்படியே விடக்கூடாது என்றும், இதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் உ.பி சீக்கிய சங்கத்தின் அலுவலக பொறுப்பாளரான ஆர்.பி. மிஸ்ரா, தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*