திமுக வெல்லும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து:ஸ்டாலின்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து பற்றி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில்  ஸ்டாலின் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக தான் வெற்றி பெறும் என உளவுத்துறை மூலம் தெரிந்ததால் ஏதேதோ காரணங்கள் கூறி இடைத்தேர்தலை நிறுத்திவிட்டார்கள். தமிழகத்தில் இனி இடைத்தேர்தல் அல்ல, பொதுத்தேர்தல் தான் வரப்போகிறது. ஜூன் 3ம் தேதி நடக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் காங். தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார். பீகார், ஒடிசா மாநில முதலமைச்சர்களும் வைர விழாவில் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*