மெட்ரோ ஊழல்: திரும்பிய பக்கம் எல்லாம் உடைப்பு!

மெட்ரோ பணி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் இன்று மீண்டும் திடீர் பள்ளம் உருவாகியிருக்கிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில், மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்த பணியினால் கடந்த மாதம் 9-ஆம் தேதி அண்ணாசாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில், அரசுப் பேருந்தும், ஒரு காரும் சிக்கிக்கொண்டன.  நீண்ட நேரத்துக்குப் பிறகு, பேருந்தும் காரும் மீட்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த நிதியமைச்சர் ஜெயக்குமார் இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, ஓரிரு நாட்களில் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென விரிசல் விழுந்தது. இந்த விரிசலை, சிமென்ட்மூலம் மெட்ரோ ரயில் ஊழியர்கள் சரிசெய்தனர்.

இந்நிலையில் மெட்ரோ பணி காரணமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அருகே, டெய்லர்ஸ் சாலையில் இன்று 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பள்ளத்தைச் சரிசெய்யும் பணியில் மாநகராட்சி மற்றும் மெட்ரோ பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையின் முக்கிய சாலைகளில் தொடர்ந்து இதுபோல் திடீர்  பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டியதாகியிருக்கிறது. இந்த திடீர் பள்ளங்களை தடுப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது.

தரமற்ற பொருட்களைக் கொண்டு கட்டுமானங்கள் செய்யப்பட்டதால் அடுத்தடுத்து மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடங்களில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. மத்திய அரசு , மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*