அரவிந்த் கெஜ்ரிவால் மீது லஞ்சம் குற்றச்சாட்டு!

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி முக்கியத் தலைவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாய் வாங்கியதை நேரடியாகவே பார்த்தேன்’ என கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி அமைச்சர் திடீர் குற்றச்சாட்டை முன்வைத்தது டெல்லி அரசியல் நிலவரம் பரபரப்பாகியுள்ளது.

இன்று காலை டெல்லி ராஜ்கோட்டில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலின் மீது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நீர்த்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா.ஊழல் புகார் தெரிவித்தார். சில காலமாகவே ஆம் ஆத்மி கட்சியினுள் பூசல்களும், குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வரும் வேளையில் கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டினால் கட்சி நிலை மேலும் மோசமடைந்துள்ளது. கபில் மிஸ்ரா நீக்கப்பட்ட அடுத்த நாளே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறுகையில், ‘டெல்லியில் தவறாகக் கையாளப்பட்ட குடிநீர் பிரச்னையால் தான் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் கட்சி தோல்வியுற்றது. இதனாலேயே கபில் நீக்கப்பட்டார்’ எனத் தெரிவித்துள்ளார். சிறிது நாட்களுக்கு முன்னர் ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடைகள் எவ்வாறு வருகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*