காவல் நிலையத்தில் நந்திதா?

ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ படத்தின் மூலமாக கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் நந்திதா. அதன்பிறகு அடுத்தடுத்து ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என சில படங்களில் நடித்தார். செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திலும் நடித்துல்ளார். மேலும், வருகிற மே 12 ஆம் தேதி இவரின் முதல் படநாயகனான தினேஷுடன் நடித்த ‘உள்குத்து’ படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், தற்போது அவர் செல்வா இயக்கத்தில் ‘வணங்காமுடி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக சிம்ரன் நடிக்க அவருடன் வரும் இன்னொரு போலீசாக நந்திதா நடித்து வருகிறார். இந்த வேடத்தில் நடித்த அனுபவம் குறித்து நந்திதா கூறுகையில், “போலீஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னபோது, எனக்கு பயமாக இருந்தது. நமக்கு அந்த வேடம் பொருந்துமா என்று தயங்கினேன். ஆனால் இயக்குநர் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். அதையடுத்து காக்கி சட்டையை அணிந்து நின்றபோது எனது பயம் காணாமல் போனது. தைரியம் தானாக வந்தது. என்னையுமறியாமல் கம்பீரமாக நின்றேன். காக்கி சட்டைக்கு உள்ள பவர் அப்போதுதான் எனக்கு தெரிந்தது என்று கூறினார் நந்திதா.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*