தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் : மருத்துவ மாணவர்கள்

மருத்துவ மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேலமுறையீடு செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவ மேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வேண்டுமென்று மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்று உயர் நீதிமன்றம் கூறியதை தொடர்ந்து போராடும் மருத்துவர்களில் ஒரு பிரிவினர் தங்களது போராட்டத்தினை வாபஸ் பெற்று கொண்டனர். ஆனால் மருத்துவ மாணவர்கள் தங்களது நிலையினை தெரிவிக்காமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ மேற்படிப்புகளுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக கடந்த 18 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவ மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாநில அரசின் உரிமையை பறிக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறையை குறைந்தபட்சம் இந்த ஆண்டாவது விலக்கு பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள போராட்ட மாணவர்கள், எதிர்காலத்திலும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் பழைய நடைமுறைகளையே பின்பற்ற சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்றும் கூறியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*