தமிழ் தெரியாத தலைமுறைகளை உருவாக்கியது திராவிட கழகங்கள்தான் : பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழ் தெரியாத தலைமுறைகளை உருவாக்கியது திராவிடக் கழகங்கள் தான் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தித் திணிப்பு மற்றும் நீட் தேர்விற்கு எதிராக நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க கட்சி சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கங்களில் மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகிறது என்று விவரிக்கப்பட்டது. வேலூரில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம் அனைத்து பல்கலைகழகங்களிலும் இந்தியை கட்டாயமாக்க மத்திய அரசு முயன்று வருவதாக   மத்திய அரசிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘தமிழகத்தில் அ.தி.மு.கவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி முழுமையாக பூர்த்தியடைய வேண்டும். விவசாயிகளை ஏமாற்றி தி.மு.க அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்து வருகிறது. தி.மு.க ஆட்சியில் தமிழை வளர்க்க என்ன முயற்சி எடுத்தார்கள் என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தற்போதுள்ள தமிழ் தெரியாத தலைமுறைகளை உருவாக்கியது திராவிடக் கழகங்கள்தான் என்று அவர் குற்றம் சாட்டினார். திராவிட கழகங்களை குறை கூறும் பொன்.ராதாகிருஷ்ணன் சார்ந்திருக்கும் பாஜக கட்சி தமிழை வளர்க்க இதுவரை என்னென்ன செய்திருக்கிறது என்று அவர் விளக்கினால் சிறப்பாக இருக்குமென சமூக வலைதளங்களில் பலர் கூறிவருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*