பன்னீர் அணியினர் ஸ்டாலினின் ஊதுகுழல் : ஜெயக்குமார்

பன்னீர்செல்வம் தலைமையிலான அணி மு.க.ஸ்டாலினின் ஊதுகுழல் என்று தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தமிழறிஞர் கால்டுவெலின் 203 வது பிறந்தநாள் விழா தமிழக அரசின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணாசதுக்கம் வளாகத்தில் உள்ள கால்டுவெல் சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் ஜெயக்குமார், “பன்னீர்செல்வம் தலைமையிலான அணி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஊதுகுழலாக இருக்கின்றனர்.. ஆட்சி கலையும் என்று  கட்சிக்கு சம்பந்தமில்லாத மைத்ரேயன் கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது.ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்று கருதுபவர்களே உண்மையான தொண்டர்கள். ஆட்சியை வீட்டுக் அனுப்ப முயலும் சந்தர்ப்பவாதிகள் காலத்தால் அடையாளம் காணப்படுவார்கள். சிறுகுச்சியும் பல் குத்த உதவும் என்பதைப் போல பன்னீர் செல்வம் கட்சிக்கு திரும்பினால் அவரை ஏற்போம்.தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை நிலவுவதாக ஸ்டாலின் கூறுவது ஆதரமற்ற குற்றச்சாட்டுகள் . 2021 ஆம் ஆண்டுதான் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அப்போதும் மக்களைச் சந்தித்து நாங்களே ஆட்சி அமைப்போம்” என்று ஜெயக்குமார் கூறினார்.

பன்னீர் அணியினர் ஸ்டாலினின் ஊதுகுழலாக இல்லை மோடியின் ஊதுகுழலாக இருக்கின்றனர் என்று தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் நிலையில் ஜெயக்குமாருக்கு தெரியவில்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் அவர் மத்திய அரசை வெளிப்படையாக விமர்சித்தால் அதன் நடவடிக்கைகளுக்கு ஆளாகிவிடுவோம் என்ற பயத்தில்தான் தொடர்ந்து திமுக மேல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் என்று பரவலாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*