இலங்கை திரும்பவுள்ள அகதிகள்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் திரும்பவும் தமது தாயகம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 2009 ஆண்டு உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததை அடுத்து 5000 பேர் தமது தாய்நாட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 119 முகாம்களில் 67 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். அத்துடன் மேலும் 30 ஆயிரம் பேர் தமிழக காவல்துறையின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் வசித்து வருவதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் தற்போது வசிப்பதற்கான சூழல் ஓரளவு காணப்படுவதாலும், அங்கு வேலைவாய்ப்புகள் காணப்படுவதாலும் நாம் செந்த நாடு செல்ல விரும்புவதாக தாயகம் திரும்பவுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் 46 அகதிகள் தாயகம் சென்றடைந்துள்ள நிலையில். தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையிலானோர் தாயகம் செல்ல விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*