எவரெஸ்ட் நாயகன் மரணம்!

எவரெஸ்ட் மலை சுமார் 8,8848 மீட்டர் உயரத்தை கொண்டது. இது கடல் மட்டத்தினைவிட மிக உயரமாகும். இந்த மலையின் உச்சியைத் தொட்டவர்கள் பலர். அதில் நேபாளம் நாட்டில் உள்ள காத்மண்டுவைச் சேர்ந்த மின் பஹதூர் ஷேர்சன் என்பவர் கடந்த 2008 ஆம்ஆண்டு தனது 76 ஆவது வயதில் எவரெஸ்ட் மலை ஏறி, ‘’மலை ஏறுபவர்களில் வயதானவர்’’ என்றபட்டத்தை வென்று கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். அதன் பிறகு, ஐந்து வருடங்கள் கழித்து ஜப்பான் நாட்டை சேர்ந்த 80 வயதுடைய யுயுச்சிரோ மியூரா என்பவரால் இந்த சாதனை முறியடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் பட்டத்தை மீண்டும் வெல்லும்நோக்கத்தில், 2015 ஆம் ஆண்டு முயற்சித்த போது நிலநடுக்கத்தினால் இந்தத் திட்டம்கைவிடப்பட்டது. எனினும், இரண்டாவது முறையாக தன்னுடைய 86 ஆவது வயதில் இந்த சாதனையைநடத்த, மலை ஏறிக்கொண்டிருக்கும் போது தனது உயிரை விட்டுள்ளார் மின் பஹதூர் ஷேர்சன். இவர் சுமார் 5,000 மீட்டர் அளவுக்கு மேல் இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இதைப்பற்றிஅவரின் முகாம் ஒருங்கினைப்பாளர் கூறியதாவது, ‘’ இந்தப் பட்டத்தை வெல்வதே அவரதுகடைசி ஆசை ஆகும். அத்துடன் அவர் அனைத்து மலை ஏறுபவர்களுக்கு முன்னோடியாக இருக்க ஆசைப்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*