ஒடிசாவில் புதிய அமைச்சரவை!

ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

பிஜு ஜனதா தளம் பின்னடைவைச் சந்தித்ததை தொடர்ந்து ஒரிசா அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார். அதற்கு வழிவகை செய்ய 10 அமைச்சர்களும், சபாநாயகரும் தன் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் மே 7ஆம் தேதி தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 10 அமைச்சர்கள் புதிதாகப் பதவியேற்றனர். இதில் ஆறு பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றிருக்கின்றனர்.

இந்த புதிய அமைச்சரவையில் சுர்ஜ்யா நாராயண் பட்ரோ, பிரபுல்லா மல்லிக், ரமேஷ் சந்திர மஜ்கி, நிருசிங்கா சரண் சகு, அனந்தா தாஸ், சுஷந்தா சிங், மஹேஷ்வர் மோகந்தி, சஷி மகுஷன் பெகெரா, பிரதாப் ஜெனா மற்றும் சந்திர சாரதி பெகெரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்பு சபாநாயகராக இருந்த நிரஞ்சன் புஜாரியும் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் நவீன் பட்நாயக், துணை சபாநாயகர் மற்றும் பிஜு ஜனதா தளத்தின் மற்ற தலைவர்களும் பங்கு பெற்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*