மோடி வீடு முற்றுகையிடப்படும் : அய்யாக்கண்ணு அறிவிப்பு!

விவசாயிகள் பிரச்னைகள் குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் மத்திய அரசும் மாநில அரசும் மேற்கொள்ளததால் மே 21 -ஆம் தேதி பிரதமர் இல்லம் முற்றுகையிடப்படும் என தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் . 41 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்றது. இந்த தொடர் போராட்டத்தில் எவ்வித முடிவையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. ஆனால் அப்போது டெல்லி வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அவ்வாறு மத்திய அரசு உங்களுக்கு உதவ முன்வர வில்லை என்றால் தமிழக அரசு செய்யும் என உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அய்யாக்கண்ணு அறிவித்தார். ஆனால் இதுவரை தமிழக அரசும் மத்திய அரசும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தேசிய நதிநீதி இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், டெல்லியில் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி பிரதமர் இல்லம் முற்றுகையிடப்படும். மே 21-ஆம் தேதி டெல்லியில் 300 விவசாய சங்கத்துடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்த வாரத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளேன் என்று அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*