கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டு : கபில் மிஸ்ரா கட்சியிலிருந்து நீக்கம்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, கபில் மிஸ்ரா ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

டெல்லி மாநிலத்தின் சுற்றுலாத் துறை மற்றும் நீர் வளத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமாஸ் விஷ்வாஸின் ஆதரவாளராக இருந்தவர். அமைச்சர் பதவிக்குரிய பணிகளை சரியாக செய்யவில்லை என கூறி கடந்த 6-ஆம் தேதி அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் குமாஸின் ஆதரவாளராக மிஸ்ரா இருந்ததால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டது என கூறப்பட்டது. இதையடுத்து, கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரிடமிருந்து கெஜ்ரிவால் 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதை தான் நேரில் பார்த்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அவரின் குற்றச்சாட்டு டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கெஜ்ரிவாலை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவும் டெல்லி ஆளுநர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்கி அக்கட்சி தலமை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த முடிவு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அக்கட்சியின் உயர் அதிகாரமிக்க அரசியல் விவகாரங்கள் குழுவால் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*