‘சிவகாமி தேவி’ ஆக முடியாத ஸ்ரீதேவி

உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்திருக்கிறது ‘பாகுபலி-2’ திரைப்படம். இந்த திரைப்படத்தில் மக்களால் வெகுவாக பாராட்டப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ‘சிவகாமி தேவி’. நடிகை ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இந்த கதாபாத்திரத்துக்கு அவ்வளவு பொருத்தமாக இருந்தது. இதனால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ராஜமௌலியின் முதல் தேர்வாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் கேட்டதால் அவரை ஒதுக்கிவிட்டு ரம்யா கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2.5 கோடி சம்பளத்தில் இந்த ‘சிவகாமி தேவி’ கதாபாத்திரத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். அவரது திரை வாழ்க்கையில் ‘படையப்பா’ நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு பிறகு இந்த கதாபாத்திரம்தான் பெரிதும் பேசப்படுகிறது. அதிகமான சம்பளம் கேட்டு தனக்கு வந்த நல்ல வாய்ப்பை இழந்திருக்கிறார் ஸ்ரீதேவி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*