பாஜக அரசின் சாதனைகளை வெளியிடுகிறது தமிழக அரசு!

மத்தியில் ஆளும் பாஜக அரசின் சாதனைகளை நூலாக வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 
அரசியல் கட்சிகள் தேர்தலின் போது கொடுக்கும் வாக்குறுதிகளை பதவியேற்ற பின்னர் நிறைவேற்றும் அப்படி நிறைவேற்றி சாதனை படைக்கும் திட்டங்களை சாதனை மலர்களாக மாநில செய்தி மக்கள் தொடர்புதுறை மூலம் வெளியிட்டு வரும். ஆனால், தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா மறைந்த பின்னர் சந்தர்ப்ப சூழலால் முதல்வராகி விட்ட எடப்பாடி பழனிசாமி அரசு மாநில அரசின் சாதனைகளை வெளியிடாமல் மத்தியில் ஆளும் மோடி அரசின் சாதனைகளை மக்கள் செய்தி தொடர்புத்துறை மூலம் நூலாக வெளியிட முடிவு செய்திருக்கிறார்.

 
ஜெயலலிதா இறந்த போதே மாநில நிர்வாகத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்த மத்தியில் ஆளும் பாஜக பன்னீர் செல்வத்தை முதல்வராக்கி தன் பொம்மை முதல்வராக நடத்தி வந்தது.

 
சசிகலா முதல்வராக எம்.எல்.ஏ க்களின் ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்த போதும் அவரை பதவியேற்க அனுமதிக்காத மத்திய அரசு.
சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவு படுத்தி அவரை சிறைக்கு அனுப்பியது. கட்சியை ஒழுங்கு படுத்தி வந்த தினகரனையும் சிறைக்கு அனுப்பி விட்டு எடப்பாடி அரசை மிரட்டியே தன் வழிக்குக் கொண்டு வந்தது மத்திய அரசு.

 
தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி பல திட்டங்கள் செயல்படுத்த செயலற்ற தமிழக அரசே காரணமாக இருக்கிறது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி எந்த விதமான கடிதத்தையும் எழுதாத தமிழக அரசு. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பில்லை என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த பின்னரே மத்திய அரசு நான்கு மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவங்கியுள்ளது.

 
தமிழகத்தில் ஆட்சியை தக்க வைக்கவும், வருமான வரித்துறையின் ரெய்டில் இருந்து தப்பவும் முழுவதுமாக சரணாகதி ஆகியிருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு தமிழக மக்களின் நலன்களையும் மத்தியில் அடகு வைத்து விட்டது.

 
அதன் அப்பட்டமான வெளிப்பாடுதான் மத்திய பாஜக அரசின் திட்டங்களை வெற்றிக்கதைகளாக தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு வெளியிட முடிவு செய்திருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*