கெஜ்ரிவாலுக்கு எதிராக போராடுவேன் : அன்னா ஹசாரே

லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு எதிராக, போராட்டத்தில் இறங்குவேன் எனக் கூறியுள்ளார் அன்னா ஹசாரே.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா ஆம் ஆத்மியை சேர்ந்த சத்யேந்திர ஜெயினிடம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதை தான் நேரில் பார்த்ததாகவும் அவர் கூறினார். மேலும் கெஜ்ரிவாலை லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை மேற்கொள்ளவும் டெல்லி ஆளுநர் உத்தரவளித்தார். இதையடுத்து டெல்லி அரசியல் சூழல் பரபரப்பானது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றம்சாட்டப்பட்டிருப்பதால் மனமுடைந்து போயிருப்பதாக அன்னா ஹசாரே கூறியிருந்தார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு எதிராகப் போராடுவேன் என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். என்னிடம் போதிய ஆதாரங்கள் இருந்தால் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டேன் கெஜ்ரிவால் மீது குற்றம் சுமத்தியுள்ள கபில் மிஸ்ரா தனது பதவி பறிக்கப்பட்ட பின் இவ்வாறு பேசுவது சந்தேகத்துக்கு இடமளிப்பதாக அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*