கேன்களை வைத்து கழிவறை உருவாக்கிய மாணவர்கள்!

பயன்படாது என ஒதுக்கப்பட்ட பொருட்களை நாம் எப்படி பயன்படுத்தலாம் என்று காமெடியாக வரும் பல போட்டோ மீம்களை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் தண்ணீர் கேன்களை வைத்து சுத்தமான டாய்லெட்டை உருவாக்கி சாதித்திருக்கிறார்கள் அரசுப்பள்ளி மாணவர்கள்.

 
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குரும்பட்டி கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மத்தியப் பள்ளியில் கிட்டத்தட்ட 98 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இது கிராமப்புற பள்ளி என்பதால் நகரப்பள்ளிகளில் இருக்கும் வசதிகள் எதுவும் இங்கு இல்லை.


இதில் பெரும் பிரச்சனையாக இருந்தது அங்கு கழிப்பறை வசதிகள் இல்லாதது ஆகும். கழிப்பறை வசதி இல்லாததால் பள்ளி சுவர் தான் பயன்படுத்தப்பட்டது.
அங்குபடித்துவரும் 13 வயது மாணவர்களாகிய சுபிக் பாண்டியன், ராகுல், பிரபாகரன், தயாநிதி, சந்தோஷ் ஆகியோர் இது இப்படியே விட்டால் சரி வராது என்று, 2ஆம் வகுப்பு ஆசிரியர் கேசவன் என்பவர் உதவியுடன் 20லிட்டர் வெற்று தண்ணீர் கேன்களை வாங்கி, வெட்டி மாடர்ன் கழிவறை போன்று உருவாக்கியுள்ளனர். இதற்கு தேவையான அனைத்தும் தங்களுக்கு குறைந்த விலையிலேயே கிடைத்துள்ளது என்றும் மொத்தமாக 600 ரூபாய் தான் செலவானது என்றும் மகிழ்ச்சியாக கூறியுள்ளனர்.

 

இது எவ்வாறு அமைப்பது என்பதையெல்லாம் ஆசிரியர் கேசவன் தான் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு ‘’பாதுகாப்பான பயன் முறை கழிப்பறை’’ என பெயரிட்டுள்ளனர். இந்தத் திட்டத்தினை அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே திட்டமிட்டுள்ள நிலையில், ‘’மாற்றத்திற்கான வடிவமைப்பு’’ எனும் அமைப்பின் ”DFC என்னால் முடியும் பள்ளிச் சவால் 2016’’ என்னும் விருதுகளில் அவர்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்தத் திட்டம் நிறைவேறியுள்ள நிலையில், இதனை ‘’தைரியமான யோசனை விருது’’ எனக் கூறி இந்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களுடன் 50,000 ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது.

 

 

இந்தத் திட்டத்தை அருகில் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் கூறி, எவ்வாறு செய்வது என்பதில் இருந்து எப்படி பயன்படுத்துவது என்பது வரை விளக்கமாக கூறியுள்ளார்கள்.

 

இந்தத் திட்டத்தைப் பற்றி மாணவர்களிடம் கேட்ட பொழுது, ‘’ ஒரு திட்டத்தை முதலில் அனுபவவித்து பின் கற்பனை செய்து அதன் பின் திட்டத்தை அமுல் படுத்தி அனைவருக்கும் கொடுக்க வேண்டும்’’ என ஒரு புதிய விளக்கத்தை கூறியுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*