பாபா ராம்தேவ் பக்தர்களா டிஸ்கவரி சேனல்?

பாபா ராம்தேவ் வாழ்க்கை வரலாறு பற்றிய தொலைக்காட்சி தொடர் 65 பகுதிகளாக டிஸ்கவரி ஹிந்தியில் ஒளிபரப்பாக உள்ளது.

2017 ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும் டிஸ்கவரி ஜீட் என்ற புதிய பொழுதுபோக்கு சேனலை டிஸ்கவரி கம்யூனிகேஷன் அறிவித்துள்ளது. புதிய சேனல் நெட்வொர்க்கின் லட்சியமானது, முதலீடாக இந்தியாவில் அசல் உள்ளூர் தயாரிப்புகளில் முதலீடு செய்வதுடன், சிறந்த குற்ற விசாரணைகள், சிறிய நகரங்களின் கதாநாயகர்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் உட்பட திட்டவட்டமான வகைகளில் சமூகங்களை வளர்ப்பதாகும்.

“டிஸ்கவரி ஜீட் ஒன்றைத் தொடங்குவதற்கு நாங்கள் உற்சாகமாக உள்ளோம், இது ஒரு புதிய பாணியிலான பொழுதுபோக்கு சேனலாகும். இது உயரமான கதைகளை வழங்குவதற்காகவும் வளங்களை காப்பதற்குமான நிகழ்ச்சிகளை தரும்” என்று தெற்கு ஆசியாவின் மூத்த துணைத் தலைவரும் பொது மேலாளருமான கரன் பஜாஜ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாஜக-விற்கு மறைமுக ஆதரவு அளித்து வரும் பிரபல பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன முதலீட்டாளர் பாபா ராம் தேவ், பல அரசியல் சர்ச்சைகளில் இவர் பெயர் அடிபட்டு வருகிறது. இவர் நடத்தும் ஆசிரமத்தில் உள்ள தொழிலாளர் பிரச்சினை குறித்து தொழிற்சங்க போராட்டங்கள் நடந்தன.

இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்தினார். பின்னர் அரசு ஆய்வகங்களில் இதனை சோதித்து கொடுக்கப்பட்ட ஆய்வுபொருட்களில் மூலிகைகள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டது.

இவரது கூற்றான “ஆயுர்வேதம் எய்ட்ஸ் மற்றும் புற்று நோய் இவற்றை குணமாக்கும்” என்பதை பின்னர் ஆய்வு முடிவுகளைக் கொண்டு மறுத்ததில் நோயின் கடுமையை நோயாளிகள் எதிர்கொள்ள முடியும் என்று மட்டுமே தாம் கூறியதாக பின்வாங்கினார். இந்த சர்ச்சைகள் பற்றி இந்த தொடரில் பேசுவார்களா என்பது சந்தேகம்தான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*