பாலிவுட் செல்கிறார் பாகுபலி

பாகுபலி படம் மூலம் அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் பிரபாஸ். ஐந்து வருட பாகுபலியின் உழைப்பு இன்று பெரிய பலனை அவருக்கு தந்துள்ளது.

இந்த நிலையில் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே போன்ற படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில், அவரிடம் வருங்காலத்தில் நீங்கள் சல்மான் கானுடன் ஒரு படம் செய்வீர்களா என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் கண்டிப்பாக நடக்கும், அதையடுத்து பிரபாஸுடனும் ஒரு படம் செய்ய விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது ரோஹித் ஷெட்டி கோல்மால் என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரபாஸ் ரசிகர்கள் இதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் பிரபாஸை வைத்து ரோஹித் ஷெட்டி படம் இயக்க வேண்டும் எனவும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*