பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இதுவும் ஒரு காரணமா

பாலியல் வன்முறை பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்கள் அல்லது அதனால் கொடுமைப்படுத்தப்படுபவர்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முன்வருகிறார்கள் என்று பிளாஸ்டிக் மற்றும் அழகு சீரமைப்பு சர்ஜரி ஆய்வுப் பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இளம் வயதினர் தங்களுடைய அழகின்மையால் இந்த வன்முறைகளால் பாதிக்கப்படுவதால், அந்தக் கேலிகளையும் வன்முறைகளையும் முறியடிக்க சர்ஜரிகள் செய்து கொண்டால் தான் முடியும் என்ற ஆசை வலைக்குள் விழுந்து விடவே, சர்ஜரிகளை மேற்கொண்டு அழகாகிவிடுகிறார்கள். ‘பிளாஸ்டிக் சர்ஜரிகளை மேற்கொண்டு வரும் பெண்களின் வாழ்க்கை வரலாற்றை அனைத்து உலக மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்’ என்றும் இந்த சிகிச்சைகள் மேற்கொள்பவர்கள் 11 வயதிலிருந்து 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார் இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டைட்டர் வாக். இதில், ஆண்களை விட  பெண்களே அதிகமாக உள்ளனர், ஏனெனில், பெண்களில் பலர் தான் அழகின்மையால் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என அவர் தெரிவித்துள்ளார். இவர் மேற்கொண்ட ஆய்வில், 30 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குறைந்த படிப்புக் கொண்ட பெண்களும் சர்ஜரிகள் மேற்கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வன்கொடுமைகளால் துன்புறும் இளையர்களுக்கு ஆலோசனை வழங்கினால் இந்த சர்ஜரிகளைக் குறைக்கலாம் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*