மீண்டும் மீண்டும் அஜித்திடம் சென்று கேட்க முடியாது – உதயநிதி

கமல்ஹாசன், விஜய், சூர்யா என பலரின் படங்களை தயாரித்தவர் உதயநிதி ஸ்டாலின். பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை தயாரித்திருந்தாலும் நடிகர் அஜித்தை வைத்து அவர் இன்னும் படம் செய்யவில்லை. ஏன் என்று கேட்டதற்கு, அஜித்துடன் இணைந்து வேலை செய்வது குறித்து ஏற்கனவே அவரிடம் பேசியிருக்கிறேன்.அதற்கு அவர் சமயம் வரும் போது சொல்கிறேன்  படம் பண்ணுவோம் என்றார்.

பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவரை அழைத்து பேசினேன். அப்பொழுதும் இதே பதிலை தான் கூறினார். இதற்காக மீண்டும் மீண்டும் அவரிடம் சென்று கேட்க முடியாது. அவர் எப்பொழுது சொல்கிறாரோ அப்பொழுது படம் செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*