ஏடிஎம்: எஸ்.பி.ஐ கிளப்பும் பீதி!

ஜூன் 1 முதல் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 25ரூபாய் வசூலிக்கப்படும் பாரத ஸ்டேட் பாங்க் அறிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் பாங்க் இவ்வாறு அறிவித்திருப்பது அனைத்து தரப்பிலும் வெறுப்பையும், கோபத்தையும்  உண்டாக்கியுள்ளது. இதற்கு வங்கி ஊழியர் சம்மேளனமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு பொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ இவ்வாறு செயல்படக் கூடாது என இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர்  சி.பி.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து நாட்டு மக்கள் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி இப்பொழுதுதான் அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்துள்ளனர். அதற்குள் அரசு தரப்பிலிருந்து அடுத்த இடையூறு வந்திருப்பது மக்களிடம் மேலும் வெறுப்பை அதிகப்படுத்தியுள்ளது. பல்வேறு கிராம மக்களாலும் நடுத்தர வர்க்கத்தாலும் திறக்கப்பட்ட கணக்குகள்தான் பாரத ஸ்டேட் வங்கியில் அதிகம். மேலும் அவர்களிடமிருக்கும் 500ரூ, 1000ரூபாயும் செலவாகி விடக்கூடாது என்று பணத்தை வங்கிக் கணக்கிலேயே வைத்துவிட்டு வேண்டும் என்கிற பொழுது நூறு நூறு ரூபாயாக எடுத்துக் கொள்ளலாமென்ற மனநிலையில்தான் அவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படியொரு விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது மக்களிடத்தில் கடும் வெறுப்பினையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஊழல் செய்துவிட்டு பலகோடி ரூபாய் வங்கிகளில் கடன் வாங்கி அதனை திரும்பவும் அடைக்காமல் இருக்கும் தொழிலதிபரெல்லாம் நிம்மதியாக வாழும் போது நாட்டிலுள்ள சாமானிய மக்களை மேலும் துன்பத்தில் தள்ளி கொண்டிருக்கிறது மத்திய அரசு. சாமானியர்களுக்கான அரசு இது என்பதை நிரூபிப்பதாக கூறிக்கொண்டு பிரதமர், அமைச்சர்கள் என அரசு உயர் பதவியில் இருப்பவர்களின் கார்களிலிருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவதாக அறிவித்த மத்திய அரசுதான் அதே சாமானியர்களை இத்திட்டத்தின் மூலம் வதைக்கப் போகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*