கர்ணனுக்கு சிறை தண்டனை சட்ட விரோதமானது : தொல்.திருமாவளவன்

நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்திருப்பது சட்ட விரோதமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நீதிபதியை எப்படி கைது செய்ய உத்தரவிட முடியும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  இந்த விவகாரம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. நீதிபதி கர்ணனை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறுவது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கர்ணனின் செயல் ஜனநாயகத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது” என்றார்.

முன்னதாக, நீதிபதி கர்ணனை கைது செய்ய காளஹஸ்திக்கு மேற்கு வங்க தனிப்படை காவல்துறையினரும், தமிழக காவல்துறையினரும் சென்றனர். ஆனால் அங்கு கர்ணன் இல்லை. அதனையடுத்து அவர் தடாவில் இருப்பதாக அவரது செல்போன் சிக்னல் காண்பிக்க தடாவுக்கும் சென்றனர் காவல்துறையினர். ஆனால் அங்கும் அவர் இல்லாததால் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*