’’ஜான்சன் அன்ட் ஜான்சன்’’ பவுடரால் புற்றுநோய்!

‘ஜான்சன் அன்ட் ஜான்சன்’ நிறுவனத்தின் பவுடரை தான் கடந்த 40 ஆண்டு காலமாக பயன்படுத்தியால் தனக்கு கருப்பை புற்றுநோய் வந்துவிட்டது என்று வழக்குக் கோரியுள்ளார் அமெரிக்காவின் விர்ஜினியா நகரைச் சேர்ந்த ஸ்லெம்ப் (வயது 62).

இவர் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து ஹீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்துள்ளார். தனக்கு கருப்பை புற்றுநோய் வரக் காரணம் ‘ஜான்சன் அன்ட் ஜான்சன்’ தயாரிப்புக்களான பேபி பவுடர் மற்றும் உடலுக்கு பூசும் பவுடர் தான் எனக் கூறி மிவுசரி நகர நீதிமன்றத்தில் ஸ்லெம்ப் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.700 கோடி (11 கோடி டாலர்) இழப்பீடாக வழங்க ‘ஜான்சன் அன்ட் ஜான்சன்’’ நிறுவனத்திற்குவியாழக்கிழமை அன்று தீர்பளித்தார். அதே வேளை, இந்த நிறுவனம் தங்களது தயாரிப்புக்களை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்று எந்த எச்சரிக்கையும் தரவில்லை என்றும் தவறு நிறுவனத்தின் மேல் தான் உண்டு என்றும் தெரிவித்தார்.

இதுவரை, 2400 பேர் இந்த நிறுவனத்தின் மீது புகார் மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ‘ஜான்சன் அன்ட் ஜான்சன்’ நிறுவனம் இழப்பீடு தர முடியாது என்றும் இது குறித்து தாங்கள் மேல்முறையீடு செய்து நிறுவனத்தின் பெயரைக் காப்போம்’எனக் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்தக் கருத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர், ‘’இந்த நிறுவனம் எதுவித எச்சரிக்கையும் இதுவரை தரவில்லை என்றும் அறிவியல் ரீதியான ஆதாரங்களை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்றும் அமெரிக்க பெண்களுக்கென்று இருக்கும் மரியாதைகளையும், பொறுப்புகளையும் தொடர்ந்து இந்த நிறுவனம் மறுத்து வருகின்றது’’ என்றும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*