தமிழகத்தில் சொல்லாத வெசாக்கை மோடி தமிழில் சொல்கிறார்!

New Delhi: Prime Minister Narendra Modi before the ceremonial welcome of Nepal's President Bidhya Devi Bhandari at Rashtrapati Bhavan in New Delhi on Tuesday PTI Photo by Manvender Vashist (PTI4_18_2017_000077A)

சர்வதேச வெசாக் தினத்தில் கலந்துகொள்வதற்காக, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

புத்தரின் பிறந்தநாளை வெசாக் புத்த பூர்ணிமா’ நாளாகக் கொண்டாடுவது வழக்கம். இதை முன்னிட்டு, மே 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை புத்த மதம் தொடர்பான ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.  இந்த மாநாட்டில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியைப் பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  மோடியின் இரண்டாவது இலங்கைப் பயணம் இது. இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்குமிடையே வளர்ச்சி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் பயணம்குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,. ‘இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கையில் இருப்பேன். அப்போது, வெசாக் தினக் கொண்டாட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்வேன் என்று மோடி டிவிட் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு ட்விட்டரில் மட்டும் தமிழில் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டிருக்க வேண்டும். மேலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து இந்த சுற்றுப்பயணத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

புத்தரின் பிறந்த நாளை தமிழகத்தில் புத்த பூர்ணிமா என்று பொதுவில் அழைப்பது வழக்கம். இலங்கையில் புத்த பூர்ணிமாவை வெசாக் பண்டிகை என்பார்கள்.  தமிழ் தெரியாத இந்திய பிரதமர் தமிழகத்தில் பயன்படுத்தாத புத்த பூர்ணிமாவை இலங்கையில் பயன்படுத்தும் வெசாக் பண்டிகை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*