நீர் தேர்வு மோசடி: தமிழகத்தில் போராட்டம்!

10 மொழிகளில் இந்தியா முழுக்க நடந்த நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப கேள்விகள் கேட்டது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.

சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் படி படிக்கிறவர்களுக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் குஜராத் மாணவர்களுக்கு எளிதாக கேள்விகள் இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக சமதுவத்திற்கான டாகடர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சென்ற ஞாயிறு அன்று நடத்தப்பட்டது.இந்தி, ஆங்கிலம்,தமிழ்,வங்கமொழி உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் 180 வினாக்கள் இடம் பெற்றன.

 

நாடு முழுவதும் ஒரே தேர்வு. அத்தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரப்பட்டியல் தயாரிக்கப்படும் .அவ்வாறு இருக்கும் பொழுது வெவ்வேறு மொழிகளில் ,வெவ்வேறு வினாக்கள் இடம் பெற்றுள்ளன.இது பாரபட்சப் போக்கை ஏற்படுத்தியுள்ளது.இது கண்டிக்கத்தக்கது. குஜராத்தி மொழியில் நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், வங்க மொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

தமிழகத்திலும் ஆங்கில மொழி வினாத்தாளை விட தமிழ் மொழியில் அமைந்த வினாத்தாள் எளிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே,இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மீண்டும், நாடு முழுவதும் ஒரே வினாத்தாளை ,அதாவது 180 வினாக்களும் ஒன்றாக இருக்கும் வகையில் வினாத்தாளை அமைத்து மறு தேர்வை அனைத்து மொழிகளிலும் நடத்திட வேண்டும்.

 

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, இளநிலை ,முதுநிலை,உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்க நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில் ,கணினியில் உள்ள வினாக்களை திருடி ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதில் தொடர்புடைய 3 பேரை டில்லி காவல்துறை கைது செய்துள்ளது.ஆனால், இது குறித்து எந்த வித மேல் நடவடிக்கையையும் எடுக்க மத்திய அரசு தயங்குகிறது . எனவே, இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

 

குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். முதுநிலை மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை பல நாட்களுக்கு, வெவ்வேறு வினாத்தாள்களை பயன்படுத்தி , ஆன்லைன் மூலம் நடத்துவதை கைவிட வேண்டும். கோடிங் ஷீட் மூலம் , நாடு முழுவதும் ஒரே நாளில் ,ஒரே வினாத்தாளை பயன்படுத்தி தேர்வுகளை நடத்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளது.

தொடர்புக்கு :

 

ஜி.ஆர்.இரவீந்திரநாத், டாக்டர். ஏ.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படிக்கு, டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், பொதுச் செயலாளர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் . 99406 64343 / 94441 83776

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*